கோழிகளை கடித்து குதறிய நாய்கள்


கோழிகளை கடித்து குதறிய நாய்கள்
x

கோழிகளை கடித்து நாய்கள் குதறியது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கல்லாலங்குடி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஆலங்குடி கலிபுல்லா நகர் 4-ம் வீதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் இருந்த 8 கோழிகளை நாய்கள் கடித்து குதறியது. இதையடுத்த நாய்களை கட்டுப்படுத்துவதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டாமல் உடனடியாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story