92 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி


92 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி
x
திருப்பூர்


தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா ராப்டார் 2021-2022 திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மத்தியில் வெறி நோயைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் மடத்துக்குளத்தில் நடைபெற்றது.இந்த முகாமில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஈஸ்வரசாமி, பேரூராட்சித் தலைவர் கலைவாணி பாலமுரளி, உடுமலை கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஜெயராம், திருப்பூர் கால்நடை புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குனர் கவுசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் மடத்துக்குளம் கால்நடை உதவி மருத்துவர் கிருத்திகா தலைமையிலான குழுவினர் 92 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். மேலும் வெறிநோய் பரவும் விதம் மற்றும் தடுப்பூசி குறித்து உடுமலை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் விக்னேஷ் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். இந்த முகாமின் ஒரு பகுதியாக மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே வெறிநோய் குறித்து விரிவாக விளக்கப்பட்டதுடன், துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.


Next Story