களியக்காவிளையில் வீட்டு கழிவுநீர் குழாய் அடைக்கும் பணி தீவிரம்

களியக்காவிளையில் வீட்டு கழிவுநீர் குழாய் அடைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
கன்னியாகுமரி
களியக்காவிளை,
களியக்காவிளையில் வீட்டு கழிவுநீர் குழாய் அடைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
பணி தீவிரம்
களியக்காவிளை பேரூராட்சியில் பொது இடங்களில் வீட்டு கழிவுநீரை வெளியேற்றும் குழாய்களை அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரெமாதேவி தலைமையில் பணியாளர்கள் மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடு, கடைகள், வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது தனியார் மருத்துவமனை, கடைகளில் இருந்து கழிவுநீரை மழைநீர் வடிகால் ஓடையில் வெளியேற்றும் குழாய்களை கண்டறிந்து அவற்றை கான்கிரீட் கலவை மற்றும் மூடியை பயன்படுத்தி அடைத்தனர்.
அடைக்கப்பட்ட குழாய்களை மீண்டும் திறந்து பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






