தொண்டி பேரூராட்சி கவுன்சிலர் தற்கொலை
தொண்டி பேரூராட்சி கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்டார்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் தொண்டீஸ்வரன் (வயது 42). பத்திர எழுத்தர். இவர் தொண்டி பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தொண்டீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை கணேசன் தொண்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவுன்சிலர் தொண்டீஸ்வரனின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தொண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட தொண்டீஸ்வரனுக்கு தொண்டீஸ்வரி என்ற மனைவியும், ஷியாம் கணேஷ், சூரிய நாராயணன், என்ற 2 மகன்களும், ஹாசினி என்ற ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.