'பாஜக-அதிமுக போல் இருக்காதீர்கள்' - திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பெரியாரும்-பகுத்தறிவும் போல மணமக்கள் இணைந்திருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் சந்தவேலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மணமக்கள் பாஜக- அதிமுக போல் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்த வேண்டும் என்று நினைக்காமல், சுயமரியாதை சிந்தனையுடன் பெரியாரும்-பகுத்தறிவும் போல, பேரறிஞர் அண்ணாவும்-மாநில சுயாட்சியும் போல, கலைஞரும்-தமிழும் போல, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும்-திராவிட மாடல் ஆட்சியும் போல சிறப்பாக இணைந்திருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
Related Tags :
Next Story