ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டி, ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் குறை கூற வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டி, ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் குறை கூற வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 16 Nov 2022 7:08 PM IST (Updated: 16 Nov 2022 7:11 PM IST)
t-max-icont-min-icon

ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டி, ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் குறை கூற வேண்டாம். தவறை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள தயாராக உள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை அரசு மருத்துவக்கல்லூரி விடுதி அருகே தீ விபத்து நடந்த இடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

விடுதி டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது தீயை அணைக்கும் பணியில் 3 வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

தரைக்கு அருகே செல்லக் கூடிய மின் ஓயரால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது, விரைவில் சரி செய்யப்படும்.ஒரு விரும்பத் தகாத சம்பவம் நடந்துவிட்டது. ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டி, ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் குறை கூற வேண்டாம். தவறை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள தயாராக உள்ளோம் என்றார்.


Next Story