நாட்டு மக்களை பற்றி கவலைப்படாதவர் மு.க.ஸ்டாலின் என்று அவினாசியில் நடந்த வரவேற்பு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
நாட்டு மக்களை பற்றி கவலைப்படாதவர் மு.க.ஸ்டாலின் என்று அவினாசியில் நடந்த வரவேற்பு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அவினாசி
நாட்டு மக்களை பற்றி கவலைப்படாதவர் மு.க.ஸ்டாலின் என்று அவினாசியில் நடந்த வரவேற்பு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி வந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு முதன்முதலாக அவினாசி வந்துள்ளேன். பல ஆண்டுகள் போராடி வந்த மிகப்பெரிய திட்டமான அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு நான் நேரில் வந்து அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்றைய தினம் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் வறண்டு கிடந்த ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியிருக்கும். உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. விடியா தி.மு.க. அரசு நிர்வாக கோளாறு காரணமாக, நாம் கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக அத்திக்கடவு திட்டத்தில் மெத்தனம் காட்டியதால் திட்டம் முழுமை பெறவில்லை. ஆமை வேகத்தில் திட்டம் நகர்கிறது.
புதிய திட்டங்கள் இல்லை
மக்கள் எவ்வளவு எதிர்பார்த்தார்கள். 10ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று கனவு கண்டார்கள். ஆனால் அது கானல் நீரானது. 525 தேர்தல் வாக்குறுதி வெளியிட்டார். ஆனால் அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கியாஸ் சிலிண்டர் மானியம், கல்வி கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உள்ளிட்ட எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது போடப்பட்ட திட்டங்களை தான் இன்று இவர் தொடங்கி வைக்கிறார். வேறு எந்த புதிய திட்டமும் கொண்டு வரவில்லை. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தவுடன் தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் விலை குறைக்கப்பட்டது. மத்திய அரசை குறை சொல்வது தான் இவருக்கு வேலை. அத்திக்கடவு திட்டம் நாம் கொண்டு வந்தோம். அதற்கான நிதியும் கொடுத்தாகிவிட்டது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஏதோ துரதிஷ்டவசமாக நீங்கள் திறப்பது போல் நிலை வந்து விட்டது. எனவே வேகமாக திட்டத்தை நிறைவேற்றி ரிப்பன் கட் பண்ணவும். ரிப்பன் கட் பண்ணுவதுதான் உங்களது வேலை. அதைக் கூட உருப்படியாக செய்வதில்லை அதுதான் வேதனையாக இருக்கிறது.
மக்களை பற்றி கவலை இல்லை
கடுமையான மின் கட்டண உயர்வு, அவினாசி பேரூராட்சியில் வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எதில் கமிஷன், கலெக்சன், கரப்சன் வருமோ அதைத்தான் பார்க்கிறார்கள். நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. மக்களைப் பற்றி கவலைப்படாத முதல்-அமைச்சர். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தன் குடும்பத்திற்கு வருமானம் வந்தால் போதுமானது என்று ஆளுகின்ற ஒரே முதல்-அமைச்சர் தமிழக முதல்-அமைச்சர். ஏன் எங்களுக்கு வரி உயர்வு செய்ய தெரியாதா? மக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஒரு ஆட்சியாளன் மக்களின் நிலையை உணர்ந்து அதற்குத்தக்கவாறு ஆட்சி புரிய வேண்டும். அதுதான் உண்மை ஆட்சிக்கு அடையாளம். அதுவே மக்களாட்சி. ஜனநாயக முறைப்படி ஆட்சியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.லதா சேகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எ.கார்த்திக் ராஜா, நகரச்செயலாளர்கள் ப.ராமசாமி (அவினாசி), எ.பழனிசாமி (பூண்டி), மாவட்ட விவசாய அணி செயலாளர் எம்.ஆனந்தகுமார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் பி.விஜய் ஆனந்த், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன், ஒன்றிய அவை தலைவர் பி.சுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் வி. பி.நடராஜன், எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய இணை செயலாளர் எம்.செந்தில்குமார், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் ஏ.வி. தனபால், நகர இளைஞரணி செயலாளர் எஸ்.ஜெயபால், நகரத் துணைச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சிவசாமி, முன்னாள் தலைவர் எஸ்.முருகானந்தம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
-