டாஸ்மாக் கடையை அகற்றக்கூடாது என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை


டாஸ்மாக் கடையை அகற்றக்கூடாது என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை
x

டாஸ்மாக் கடையை அகற்றக்கூடாது என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

திருப்பூர்

மங்கலம்

திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் இடுவாய் -ஆட்டையம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் கிராமசபை கூட்டம் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் தலைமையில் நடந்தது. திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ், இடுவாய் கிராம நிர்வாக அதிகாரி ராதாமணி, சார்பு நீதிமன்ற நீதிபதி மேகலா, இடுவாய் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இடுவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் "இடுவாய் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்"என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இடுவாய் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள், இடுவாய் சாலையோர வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் "இடுவாய் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கடையை அகற்றக்கூடாது. அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் "என கோரிக்கை மனு வழங்கினார்கள்.



Next Story