பராமரிப்பு இல்லாத அரசு பள்ளி கட்டிடம்


பராமரிப்பு இல்லாத அரசு பள்ளி கட்டிடம்
x

பராமரிப்பு இல்லாத அரசு பள்ளி கட்டிடம்

திருப்பூர்

அவினாசி

அவினாசி பழைய பஸ் நிலையம் எதிரில் 10 ஏக்கர் பரப்பளவில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் முழுவதும் கருங்கற்கலால் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி தற்போது பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக செயல்படுகிறது. மிக நேர்த்தியாக கட்டப்பட்ட இப்பள்ளி கட்டிடத்தின் மேற்பரப்பில் பல இடங்களில் செடிகள் முளைத்து கட்டிடம் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த விரிசல் பெரிதாகி கட்டிடம் இடிந்து விடும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறை உபகணரங்கள் பழுதடைந்து பயன்பாடில்லாமல் உள்ளது. 2013-ம் ஆண்டு ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட மற்றொரு கழிவறை பயன்படுத்தாமல் பூட்டியே கிடக்கிறது. பள்ளி சுற்றுச்சுவர் அருகில் 2 பெரிய குழிகள் வெட்டப்பட்டு அதில் ஒரு குழியில் குப்பை மூட்டைகள் கொட்டி கிடக்கிறது. மழைக்காலங்களில் அந்த குழிகளில் மழைநீர் குட்டைபோல் தேங்குகி நிற்பதால் மாணவிகள் யாராவது அதில் தவறி விழ நேரிடலாம்.

சீரமைக்க வேண்டும்

மாணவிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்பட உள்ள ஏராளமான சைக்கிள்கள் வெட்ட வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது

பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. நூற்றுக்கணக்கான மாணவிகள் படித்து வரும் பள்ளி பராமரிப்பின்றி பாழ்பட்டு வருகிறது. அவினாசி மெயின்ரோட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமையான பள்ளி கட்டிடத்தை பராமரிக்க வேண்டும். பள்ளிக்கு இரவு நேர காவலாளி நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Next Story