தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி உள்ளது, கர்நாடக தேர்தலில் போட்டி ஏன்? இபிஎஸ் விளக்கம்


தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி உள்ளது, கர்நாடக தேர்தலில் போட்டி ஏன்?  இபிஎஸ் விளக்கம்
x
தினத்தந்தி 20 April 2023 6:37 PM IST (Updated: 20 April 2023 6:46 PM IST)
t-max-icont-min-icon

ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறினார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மற்றவர்களை பற்றி பேசி எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம். ஒரு சிலர் யார் என்று உங்களுக்கே தெரியும்.

தேவையில்லாமல் குழப்பிக்கொள்ள வேண்டாம். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என்பதே எங்களது லட்சியம். ஒற்றைத்தலைமை என்று சொல்ல வேண்டாம்..நான் எப்போதும் சாதாரண தொண்டன் தான்.திமுகவைஎதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக தான். இனி பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும். எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் குறித்து மீண்டும் சபாநாயகரிடம் முறையிடுவோம். தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி உள்ளது. கர்நாடகத்தில் எங்கள் அடையாளத்தை காட்ட ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம்.




Next Story