இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம்

இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம்
x

பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2023-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000 ஆகியவை வழங்கப்படுகிறது.

வீட்டிற்கே சென்று டோக்கன்

இதற்கான முன்னேற்பாடாக பொதுமக்கள் சிரமமின்றி பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றிட ஏதுவாக குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் நேரடியாக வீட்டிற்கே சென்று டோக்கன் வழங்கப்படும்.

தொடர்ந்து 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story