பொங்கல் பரிசு பெற வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி


பொங்கல் பரிசு பெற வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி
x

பொங்கல் பரிசு பெற வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி

நாகப்பட்டினம்

நாகையில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பெற வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2023-ம் ஆண்டுக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000 ஆகியவை சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து ே்ரஷன்கடைகள் மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

பொதுமக்கள் சிரமமின்றி பரிசு தொகுப்பினை பெற்றிட ஏதுவாக நேற்று முதல், டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கியது. ரேஷன் கடை பணியாளர்கள், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர். வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ந் தேதி தொடங்கி வைக்கிறார். அன்று முதல், அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

முன்னதாக இந்த சிறப்பு பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன் நேற்று முதல் வழங்கப்படுகிறது. அதன்படி வீடுவீடாக சென்று ஊழியர்கள் டோக்கன்களை வழங்குகின்றனர்.

நாகை மாவட்டத்தை பொறுத்த வரையில் மொத்தம் 365 ரேஷன் கடைகள் உள்ளன. 2 லட்சத்து 17 ஆயிரத்து 593 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தேதி, கடை எண், நேரம் இடம்பெற்றிருக்கும். தொடர்ந்து 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றார்.


Related Tags :
Next Story