மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இரட்டை தேரோட்டம்


மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இரட்டை தேரோட்டம்
x

பொன்னமராவதி அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இரட்டை தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 27-ந் தேதி காப்புக்கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று இரட்டை தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பின்னர் ஒரு தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரரும், மற்றொரு தேரில் பிடாரி அம்மனும் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடிக்க தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று தேரடியில் நிலையை அடைந்தது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.


Next Story