பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு


பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 27). இவருக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமராஜ் (32) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் ராமராஜ் மற்றும் அவரது உறவினர்கள் சுப்பையா, சரோஜா, விமலா, ரேவதி ஆகிய 5 பேரும் சேர்ந்து நந்தினியிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், 18 பவுன் நகை ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு மிரட்டி துன்புறுத்தி உள்ளனர். இதுகுறித்து நந்தினி கொடுத்த புகாரின்பேரில், கரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி, ராமராஜ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story