இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
ராமநாதபுரத்தில் இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை நடந்தது.
ராமநாதபுரம் ராம்நகர் பிருந்தாவனம் கார்டன் 2-வது தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சுவாதிபிரியா (வயது27). இவருக்கும் ராமநாதபுரம் சேகர் மகன் காளிதாஸ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. காளிதாஸ் கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். திருமணமான 2-வது மாதத்தில் இருந்து சுவாதிபிரியாவை கணவர் காளிதாசின் தாய் நம்பு என்பவர் வீட்டுவேலை செய்யச்சொல்லி கொடுமைப்படுத்தினாராம். இதற்கு அவரின் கணவர் காளிதாசும் உடந்தையாக இருந்து கொடுமைப்படுத்தினாராம். இதனால் சுவாதிபிரியா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவரது துணி மற்றும் கல்வி சான்றிதழை எடுக்க கணவர் வீட்டிற்கு சென்றாராம். அங்கு அவரை கணவர் காளிதாஸ், மாமியார் நம்பு, மாமனார் சேகர், மைத்துனர் நாகேந்திரன் ஆகியோர் அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.
இதுகுறித்து சுவாதிபிரியா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.