புதுப்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
தேனி அருகே புதுப்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி
தேனி அருகே ஆதிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி (வயது 31). இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு பிரியதர்ஷினியை சிங்கப்பூர் அழைத்துச் செல்வதாக கார்த்திகேயன் கூறினார். ஆனால், விசா கிடைக்கவில்லை என்று கூறி அவர் மட்டும் சென்று விட்டார். இந்நிலையில், கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரியதர்ஷினி புகார் செய்தார். அதன்பேரில் அவருடைய கணவர் கார்த்திகேயன், மாமியார் பாக்கியலட்சுமி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story