பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:ஊராட்சி மன்ற தலைவி உள்பட 5 பேர் மீது வழக்கு
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த ஊராட்சி தலைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி
மதுரை கே.புதூர் மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் ஹேமாவாணி (வயது 32). இவர் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில், "எனக்கும், தேனி அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சி சவளப்பட்டி காலனியை சேர்ந்த கனகராஜ் மகன் இளவரசன் (32) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது மாமியார் சந்திரா ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். திருமணத்தின் போது எனது பெற்றோர் 23 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். இந்நிலையில் கணவரும், கணவரின் குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்கின்றனர். கொலை செய்ய முயன்றனர்" என்று கூறியிருந்தார். அதன்பேரில், அவருடைய கணவர் இளவரசன், மாமியார் சந்திரா, மாமனார் கனகராஜ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story