சேலத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பல்வேறு அமைப்பினர் மலர்தூவி மரியாதை


சேலத்தில்  டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்  பல்வேறு அமைப்பினர் மலர்தூவி மரியாதை
x

சேலத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அமைப்பினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சேலம்

சேலம்,

பிறந்தநாள் விழா

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் விழா சேலத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பா.ம.க. கட்சியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் பலர் சேலம் 'தினத்தந்தி' அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம், துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி, பகுதி செயலாளர் சின்னசாமி, வார்டு செயலாளர்கள் அழகேசன், சுரேஷ், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் விஜய், மாணவர் சங்க செயலாளர் ரஞ்சித், தொழிற்சங்க செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கைப்பந்து கழகம்

சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் விழா சேலம் அழகாபுரத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் கைப்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து வரும் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் இருந்து சர்வதேச அளவில் கைப்பந்து வீரர், வீரர்களை உருவாக்குவது என்று வீரர், வீராங்கனைகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், தொழில் அதிபர் விஜயராஜ், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், பொருளாளர் விஜயகுமார், துணைத்தலைவர்கள் ராஜாராம், அகிலாதேவி, இணை செயலாளர்கள் கதிரவன், வடிவேல், கைப்பந்து கழகம் வளர்ச்சிக்குழு தலைவர் வேங்கையன், நிர்வாகி நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பனங்காட்டு மக்கள்

பனங்காட்டு மக்கள் கழகம் சார்பில் சேலம் மாவட்ட பொறுப்பாளர் மோகனவேல் தலைமையில் நிர்வாகிகள் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் சுந்தரம், கோபி, பூபதி, தாமஸ், வடிவேல், கார்த்தி, சேகர், டிங்கு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு சேலம் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ரேவதி சங்கர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தேனி மாவட்ட கூட்டுறவு துறை நடுநிலை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்புசெல்வம் தலைமையில் நிர்வாகிகள் சேலம் 'தினத்தந்தி' அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் துணைத்தலைவர் சரவணகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உயிர்மெய் தமிழ்ச்சங்கம்

சேலம் உயிர்மெய் தமிழ்ச்சங்கம் மற்றும் உலக தமிழர் பண்பாட்டு இயக்கம் ஆகியவை சார்பில் திருவள்ளுவர் சிலை அருகே டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் துணை மேயர் சாரதாதேவி, உயிர்மெய் தமிழ்ச்சங்கத்தின் மாநில தலைவர் சொல்லரசர் மற்றும் நிர்வாகிகள் சதீஷ்குமார், அசோகன், மத சார்பற்ற ஜனதாதள மாவட்ட தலைவர் வேலாயுதம், நாகராஜன், மோதிலால் நேரு, மோகன்ராஜூ, சுதந்திர ராசு, கந்தசாமி, ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story