திண்டிவனத்தில் தோட்டப் பணியாளர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட டாக்டர் ராமதாஸ்


திண்டிவனத்தில்  தோட்டப் பணியாளர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் தோட்டப் பணியாளர்களுடன் அமர்ந்து மதிய உணவை டாக்டர் ராமதாஸ் சாப்பிட்டாா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் செயல்பட்டு வரும் சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை வளாகத்தில், பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகளை பராமரிப்பு செய்யும் பணியில் 26 பெண்கள், 9 ஆண்கள் என்று மொத்தம் 35 பேர் தோட்ட பணியாளர்களாக தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர். இவர்களை தவிர நர்சரி நிறுவனத்தை சேர்ந்த 6 ஊழியர்களும் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

இங்கு வளர்க்கப்படும் மரங்கள் அனைத்தும் முழுக்க இயற்கை உரங்களை கொண்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கான உரங்கள் பண்ருட்டி பகுதியிலிருந்து வரவழைக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், மரக்கன்றுகளை கண்காணித்து வரும் தோட்ட பணியாளர்களுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நேற்று வேட்டி, சேலை மற்றும் ஊக்கதொகையை வழங்கினார். தொடர்ந்து, அவர்களுக்கு மதிய உணவையும் விருந்தாக வழங்கினார். அப்போது அந்த பணியாளர்களுடன் டாக்டர் ராமதாஸ் அமர்ந்து சாப்பிட்டார். இந்நிகழ்வின் போது, சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ச.சிவப்பிரகாசம் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story