டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ெபாறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் முதுகலை மேலாண்மை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. கணிதத்துறை தலைவி வாசுகி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, கல்லூரியின் சிறப்பம்சங்களை விளக்கி கூறினார். அவர் கூறுகையில், ஏ.ஐ.சி.டி.இ.-ன் கர்மா திட்டத்தில் மாணவர்கள் திறன் மேம்பாட்டுக்காக 6 பாடப்பிரிவுகள் கல்லூரியில் நடத்துவதற்கு அனுமதி பெற்று வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
வேதியியல் துறை தலைவி ஜோதி ஸ்டெல்லா, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர் கல்லூரியின் முன்னாள் மாணவரும், கோவில்பட்டி ஆஸ்கார் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான வினோத் பேசுகையில், மாணவர்கள் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மற்றும் ஆராய்ச்சி கருத்தரங்கில் பங்கேற்று தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். மேலும் வேலைக்கான குறிக்கோளை அமைத்து அதற்கு தங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்றார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் சிறப்புரையாற்றினார். மேலாண்ைம துறை தலைவி அமிர்தகவுரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கல்லூரியின் உள்தர உறுதிப்பிரிவு (ஐ.க்யூ.ஏ.சி.), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் 'ஸ்பேஸ்' சார்பில், 'திறன் மேம்பாடு திட்டம்-மொபைல் போன் சர்வீஸ்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் பெனோ வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர் கோயம்புத்தூரை சேர்ந்த நியூ டெக்னாலஜி தொழில்நுட்பவியலாளர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு முன்னுரை வழங்கினார். தொழில்நுட்பவியலாளர் சஜித் மொபைல் போன் சேவை மற்றும் அதன் உதிரிபாகங்கள் செயல்பாடு குறித்து எடுத்துக்கூறி செயல்முறை வகுப்பும் நடத்தினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் டார்வின் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.