டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பொருட்களை சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பொருட்களை சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை மற்றும் தர உறுதி மையம் சார்பில், பொருட்களை சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 2-ம் ஆண்டு மேலாண்மை துறை மாணவர்கள் தங்களது தொழில் முனைவோர் திறன், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக பல விற்பனையகங்களை அமைத்தனர்.
அவற்றில் உணவுப்பொருட்கள் (சைவம், அசைவம்), பால், பழச்சாறு வகைகள், ரொட்டி, சிற்றுண்டி வகைகள், கலை, கைவினை பொருட்கள், போட்டித்திறனை ஊக்குவிக்கும் விளையாட்டு வகைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து விற்பனை செய்தார்கள். ஏராளமான மாணவர்கள், பேராசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, மேலாண்மை துறை தலைவர் அமிர்த கவுரி ஆகியோர் வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைப்பாளர் மெர்லின் சித்ரா செல்வி மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.