டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறையின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் தர உறுதி மையம் சார்பில், 'நவீன வணிக நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. மாணவி விநாஷினி வரவேற்று பேசினார்.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் ஆரோக்கிய அமுதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு துறையின் பரிணாம வளர்ச்சி மற்றும் வணிகத்துறையில் நுண்ணறிவு துறையின் பல்வேறு பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். இதில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி மாரிமுத்து நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, மேலாண்மை துறை தலைவர் அமிர்த கவுரி வழிகாட்டுதலின்பேரில், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் நளினி மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.