டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சிவந்தி கோப்பை கால்பந்து போட்டி தொடக்கம்
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சிவந்தி கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில், கல்லூரி நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலாமாண்டு சிவந்தி கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கியது. தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார். இந்த கால்பந்து போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, நாசரேத் மர்க்காசிஸ் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, வ.உ.சி. கல்லூரி, பாளையங்கோட்டை தூயயோவான் கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி மற்றும் பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி ஆகிய 8 கல்லூரிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.