வடிகால் வாய்க்கால்களை சீரமைக்கும் பணி நகரமன்ற தலைவர் ஆய்வு
வடிகால் வாய்க்கால்களை சீரமைக்கும் பணியை விழுப்புரம் நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தாா்
விழுப்புரம்
விழுப்புரம் நகரில் மழைக்காலத்தையொட்டி சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி சீரமைத்திட அதிகாரிகளுக்கு நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தின் எதிரே ஏரிக்கு செல்லக்கூடிய வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகளை விரைந்து முடிக்கவும், சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகர்நலஅலுவலர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு அலுவலர் கோகுல் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் சக்கரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story