நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்


நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்
x

ஆலங்குளம் பகுதியில் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கண்மாய்

ஆலங்குளம் பகுதியில் ஏ.லட்சுமிபுரம் கிராமத்தில் தலக்குடை அய்யனார் கோவில் கண்மாய், கீழாண்மறைநாடு கிராமத்தில் பெரியகுளம், புதுக்குளம், எதிர்கோட்டை கிராமத்தில், கோபாலசமுத்திரம், சிறுகுளம், நதிக்குடியில் செவல்குளம், சிறுகுளம், குண்டாயிருப்பு கிராமத்தில் கொட்டமடிக்கிபட்டி கண்மாய், அப்பயநாயக்கர் பட்டி கிராமத்தில், மேலாண்மறைநாடு புதுக்கண்மாய் ஆகிய கண்மாய்கள் உள்ளன.

இவற்றில் சில கண்மாய்கள் பொதுப்பணி துறையினர் பராமரிப்பிலும், சில கண்மாய்கள் வெம்பக்கோட்டை ஒன்றியத்தின் பராமரிப்பிலும் உள்ளன.

சீரமைக்க கோரிக்கை

இந்த கண்மாய்களின் கரைகள் பழுதடைந்தும், கண்மாய்க்குள் கருவேல மரங்கள் முளைத்தும் உள்ளது. கண்மாய்க்கு நீர்வரத்து வரும் கால்வாய்களும் சேதமடைந்து காணப்படுகிறது.

ஆதலால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக கண்மாய்க்கு வரும் நீர்வரத்து கால்வாய், கரைகளை சீரமைத்து, கருவேல மரங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story