தஞ்சையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றம் சரி செய்யப்பட்டது


தஞ்சையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றம் சரி செய்யப்பட்டது
x

தஞ்சையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றம் சரி செய்யப்பட்டது

தஞ்சாவூர்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தஞ்சையில் பாதாள சாக்கடை நீர் வெளியேற்றம் சரி செய்யப்பட்டது.

பாதாள சாக்கடை

தஞ்சை டவுன்கரம்பை அருகே எஸ்.டி.எம். நகர் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், தனியார் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் எப்போதும் பொதுமக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் எஸ்.டி.எம்.நகர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் சாலையோரத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

உடனடியாக சீரமைப்பு

இது குறித்து 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்திக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு சென்று, மாநகராட்சி பணியாளர்கள் உதவியோடு பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்தார். இதையடுத்து கழிவுநீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.

மேலும் அந்த பகுதியில் தேங்கி இருந்த கழிவுநீரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் அந்த பகுதி முழுவதும் தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்காக பிளீச்சிங் பவுடரும் தெளிக்கப்பட்டது. 'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக உடனடியாக நடவடிக்கை எடுத்ததையடுத்து, தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Related Tags :
Next Story