முள்ளக்காடு முதல் கோவளம் கடற்கரை வரை வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி
முள்ளக்காடு முதல் கோவளம் கடற்கரை வரை வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள, முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்கத்தினர் ஸ்பிக் தொழிற்சாலை நிறுவனத்திடம் மழைக்காலத்திற்கு முன் முள்ளக்காடு ஊரின் வழியாக கடலுக்கு செல்லும் வடிகால் வாய்க்காலை தூர்வாரி தருமாறு கோரிக்கை வைத்தனர். விவசாய சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, உடனடியாக வாய்க்காலை தூர்வாரி தருவதற்கு ஸ்பிக் நிறுவனத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அதன்படி நேற்று காலை முதல் பொக்லைன் எந்திரத்தின் மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது. ஸ்பிக் நிறுவன துணைத்தலைவர் கே. கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், நிர்வாக முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில், மக்கள் தொடர்பு துணை மேலாளர் அம்ரிதா கவுரி, மக்கள்தொடர்பு அலுவலர் குணசேகர் இணைந்து வடிநீர் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்கத்தலைவர் திருமால், செயலாளர் ரகுபதி, நிர்வாகி கிருபானந்தம், உப்பாற்று ஓடை ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் பணி தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ளதாக ஸ்பிக் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.