திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

காரிமங்கலத்தில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

தர்மபுரி

காரிமங்கலம்

காரிமங்கலத்தில் திரபவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கணபதி பூஜை, முதல் காலயாக பூஜை, 108 மூலிகை ஹோமம், அஷ்டபந்தனம் சான்றுதல் ஆகியவை நடந்தது. நேற்று 2-ம் கால யாக பூஜையும், தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. பென்னேஸ்வரம் மடம் மோகன் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை 12 கிராம ஊர் கவுண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story