திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண வரவேற்பு பொதுக்கூட்டம்
திருவண்ணாமலையில் திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண வரவேற்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கி.வீரமணி பங்கேற்றார்.
திருவண்ணாமலை
திராவிடர் கழகம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் ஈரோடு முதல் கடலூர் வரை சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண வரவேற்பு பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் அறிஞர் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் சி.மூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் முன்னிலை வகித்து பேசினார்.
இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மண்டல செயலாளர் பி.பட்டாபிராமன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், ம.தி.மு.க. மாணவர் அணி பாசறை பாபு, த.ம.மு.க. நாசர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story