திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்


திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
x

திருக்கோவிலூர் அருகே திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. பங்கேற்பு

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரில் தி.மு.க. இளைஞரணியினர் கலந்து கொண்ட திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. தலைமை தாங்கி பயிற்சி பாசறை கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும், அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவருமான வக்கீல் ராயல் எஸ்.அன்பு வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், திருக்கோவிலூர் நகராட்சி தலைவருமான டி.என்.முருகன், முன்னாள் எம்.எல்.ஏ.புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலாநிதிவீரசாமி எம்.பி, விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ. வுமான நா.புகழேந்தி, வே.மதிமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் கார்த்தி, அய்யப்பன், பாலமுருகன், நிர்மல்ராஜ், புஷ்பராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் தினகரன் நன்றி கூறினார்.


Next Story