திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் திராவிட தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அருந்ததியர்கள் 18 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ் குமரன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் லட்சுமணன், தெற்கு மாவட்ட நிதி செயலாளர் செந்தில்குமார், வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்துமாரி, நிதி செயலாளர் சங்கை முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் நெல்லை கதிரவன், தென் மண்டல தலைவர் பொதிகை ஆதவன், துணைத் தலைவர் ஆதிவீரன், வடக்கு மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் கார்த்திக், துணைத் தலைவர் மாரிமுத்து, வடக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் உட்பட பலர் பேசினார்கள்.
Related Tags :
Next Story