ரூ.8 கோடியே 6 லட்சத்தில் தூர்வாரும் பணி


ரூ.8 கோடியே 6 லட்சத்தில்  தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

தூர்வாரும் பணி

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி, வீரசோழன், மஞ்சளாறு, மகிமலையாறு, விக்ரமன் ஆறு, அய்யாவையானாறு, பழவாறு மண்ணியாறு, தெற்குராஜன் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் இருந்து பிரியும் பிரிவு வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வார, விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு (2023-24) ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பில் 749.74 கி.மீ நீளத்திற்கு தூர்வார முடிவு செய்யப்பட்டு, மேற்கண்ட வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரப்பட உள்ளது.

இதனால் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டங்களை சேர்ந்த விவசாய நிலங்களுக்கு பாசனம் தங்குதடையின்றி கடைமடை வரை சென்றடையும். மேலும் மழைக்காலங்களில் பாசன நிலங்களில் தேங்கும் வெள்ள நீர் விரைவாக வடியவும் உறுதி செய்யப்படும்.

வாழ்க்கை வாய்க்கால்

அந்த வகையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் ஊராட்சியில் மஞ்சளாற்றின் வலது கரையில் பிரியும் வாழ்க்கை வாய்க்கால் 4 கி.மீ தூரத்திற்கு ரூ.22 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி தொடங்கியது. இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர்.

பின்னர் கலெக்டர் கூறுகையில், 2023-24-ம் ஆண்டிற்கான தூர்வாரம் பணியை நீர்வளத்துறை அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்துள்ளோம். நமது மாவட்டத்திற்கு ரூ.8 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த மேமாத்தூர், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 657 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பணிகளை விரைந்து முடிக்க..

பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். முழுமையாக தூர்வாரும் பணியை நிறைவு செய்த பிறகு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படும் என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், ஜெயராமன், உதவி பொறியாளர்கள் விஜயபாஸ்கர், வீரப்பன், தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி மற்றும் உழவர் குழுவினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story