மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து  வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலையில் வியாபாரத்துக்கு செல்லுமாறு மனைவி கண்டித்ததால் மனமுடைந்த வியாபாரி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து ெகாண்டுள்ளார்.

வியாபாரி

கழுகுமலை அண்ணா புது தெருவை சேர்ந்த மலைச்சாமி மகன் அழகுராஜ். (வயது 38). வியாபாரி. இவர் கேரளாவில் இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பி வந்துள்ளார். பின்னர் அவர் அங்கு வியாபாரத்துக்கு செல்லாமல் கழுகுமலையில் மது அருந்திவிட்டு சுற்றி திரிந்துள்ளார்.

மனைவி கண்டிப்பு

இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வியாபாரத்துக்கு செல்லுமாறு மனைவி கண்டிப்புடன் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அழகுராஜ் அன்று இரவு வீட்டில் மதுவில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினரும், உறவினர்களும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.‌

சாவு

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைவியில் ேசர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன அழகுராஜூவுக்கு வடிவு என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.


Next Story