14 சதவீதம் கூடுதல் அகவிலைப்படியை வழங்கக்கோரி குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


14 சதவீதம் கூடுதல் அகவிலைப்படியை வழங்கக்கோரி  குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

14 சதவீதம் கூடுதல் அகவிலைப்படியை வழங்கக்கோரி குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம்,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் அரசு அறிவித்த 14 சதவீதம் கூடுதல் அகவிலைப்படியை வழங்கக்கோரி சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் சந்திரசேகரன் உள்பட ஓய்வு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் 1.1.2022 முதல் 30.9.2022 வரை 9 மாதங்கள் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் அறிவித்தபடி 1.7.2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து சங்க தலைவர் நாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி இதுவரை ஊதியம், ஓய்வூதியம், படிகள் உள்ளிட்ட அனைத்து பணப்பயன்களும், சலுகைகளும் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அரசு அறிவித்த 14 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி 9 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இதனால் ஓய்வூதியதாரர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள். எனவே, நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், என்றார்.


Next Story