7 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


7 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x

நெல்லையில் சொத்து வரி செலுத்தாத 7 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நீண்ட நாட்களாக பாக்கி வைத்து உள்ளோர் கட்டிடத்தில் மாநகராட்சி குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று நெல்லை மண்டலம் 21-வது வார்டு உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு, பாளையங்கோட்டை 38-வது வார்டு சரண்யா நகர், தச்சநல்லூர் மண்டலம் 30-வது வார்டு பெருமாள் கோவில் தெரு, மேலப்பாளையம் மண்டலம் 54-வது வார்டு என்.ஜி.ஓ. 'ஏ' காலனி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 7 வீடுகளில் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். எனவே வரிபாக்கியை உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டு உள்ளார்.


Next Story