கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதிவிரைவில் வழங்கப்படும்


கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதிவிரைவில் வழங்கப்படும்
x

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதிவிரைவில் இணைப்புகள் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

ஈரோடு:

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதிவிரைவில் இணைப்புகள் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்து உள்ளார்.

கூட்டு குடிநீர் திட்டம்

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மக்களுக்கான குடிநீர் வினியோகம் தொடக்க நிகழ்ச்சி பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கலந்துகொண்டு மின்சார பொத்தானை அழுத்தி குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெருந்துறை மக்கள் நீண்ட நாள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த திட்டம் இது. நீரின்றி அமையாது உலகு என்று சொல்லுவார்கள். பெண்களை மையமாக வைத்து ஒவ்வொரு குடும்பமும் செயல்படுகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக பெண்களுக்கு மன நிறைவு ஏற்பட்டு உள்ளது.

135 லிட்டர்

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகள் இருந்தாலும் கூட, அடிப்படை கட்டமைப்பு வசதி முழுமையாக பெற்ற ஒரே ஒரு தொகுதி பெருந்துறை தான். அசுர வளர்ச்சியை பெருந்துறை தொகுதி பெற்று இருக்கிறது. இந்த கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வர முன்னால் இருந்த அரசும், நானும் பெருமுயற்சி எடுத்து கொண்டு வந்தோம். இப்போது முழுமை பெறுவதற்கு காரணம் தி.மு.க. அரசு.

தனிநபருக்கு 90 லிட்டர் குடிநீர் வினியோகம் என்று இருந்ததை 135 லிட்டராக என்னால் மாற்றப்பட்டு அது செயல்படுத்தப்பட உள்ளது. இதுவரை செயல்பட்டு வந்த குடிநீர் திட்டங்கள் அனைத்தும் கொடிவேரிக்கு வெளியில் இருந்து தண்ணீர் எடுக்கவே நிறைவேற்றப்பட்டது. பெருந்துறைக்கு மட்டும் அணையின் உள்பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி பெற்று எடுக்கப்பட்டு வருகிறது. பெருந்துறைக்கு தண்ணீர் வரவில்லை என்றால் கொடிவேரி வற்றிவிட்டது என்று தான் அர்த்தம். எனவே வாழ்நாள் முழுவதும் தண்ணீர் வரும் வகையில் இந்த திட்டம் அமைந்து உள்ளது. மேலும், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டடத்தில் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதிவிரைவில் இணைப்பு வழங்கப்படும். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் விடுபட்ட பகுதிகளையும் இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் கூறினார்.

பேரூராட்சி தலைவர்

இந்த நிகழ்ச்சியில் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வம், துணைத்தலைவர் சக்திகுமார், அகரம் மூர்த்தி, கோகுல்குமார், சரவணன், துர்கா தேவி சரவணன், அன்புச்செல்வி கிருஷ்ணன், இளங்கோ, ராஜா என்கிற ராஜேந்திரன், சுப்பிரமணி, பல்லவி பரமசிவன், மோதிலால் நேரு, வைகை சுரேஷ், குருசாமி, கார்த்தி, மகேஷ், குப்புசாமி, லோகநாதன், துரையன், பாலசுப்பிரமணி, மணி, கிருபாகரன், தங்கமுத்து, செந்தில்குமார், மூர்த்தி, முருகராஜ், நவபாரதி, செந்தில்குமார், பாலகிருஷ்ணன், சேனாபதி என்கிற சின்னக்கண்ணு, சரஸ்வதி துரைராஜ், ஹேமலதா சம்பத், பார்வதி ராஜ், சுப்பு, வெற்றி வெங்கடாசலம், கோபிநாத், கதிரேசன், பாலவிக்னேஷ், பிரபாவதி நல்லசிவம், சரண்யா சுரேஷ், தங்கமுத்து, நாகராஜன், பிரவீன் குமார், சோளி சக்திவேல், ரங்கசாமி, ராயல் குமார், சதீஷ், ராஜேஷ், முத்துக்குமார், முத்துசாமி, பொன்னுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story