ஆதிவாசி மக்களுக்கு குடிநீர் வசதி
வனத்துறை சார்பில் ஆதிவாசி மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா மாங்கோடு அருகே ஈராணி ஆதிவாசி கிராமம் உள்ளது. அப்பகுதியில் குடிநீர் வசதி இல்லாமல் இருந்தது. அந்த கிராமத்தை கூடலூர் வன கோட்ட அலுவலர் ஓம்காரம் தலைமையில் சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர் ராபட் வில்சன் மற்றும் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது போதிய குடிநீர் வசதி இன்றி அவதிப்பட்டு வருகிறோம் என்றும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் ஆதிவாசி மக்கள் மனு கொடுத்தனர். அதன்படி சேரம்பாடி வனச்சரகம் சார்பில் ரூ.8 லட்சம் செலவில் ஈராணியில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டதோடு, வீடுகளுக்கு குடிநீர் குழாய்க்ள பொருத்தும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று வனச்சரகர் அய்யனார் குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். இதில் வனவர் ஆனந்த் மற்றும் ஊர் தலைவர், மக்கள் கலந்துகொண்டனர்.
மேலும் நீண்ட நாட்களாக ஆதிவாசி மக்கள் ஊற்று நீரை எடுத்து பயன்படுத்தினர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் குடிநீர் வசதி செய்து கொடுத்த வனத்துறையினருக்கு ஆதிவாசி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.