குடிநீர் குழாய் உடைப்பு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்
குடிநீர் குழாய் உடைப்பு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்
வீரபாண்டி
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் சுமார் பத்து லட்சம் லிட்டர் அளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் முருகம்பாளையம், சுண்ட மேடு மற்றும் இடுவம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முருகம் பாளையம் பகுதியில் இருந்து இடுவம்பாளையம் செல்லும் சாலையின் நடுவில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சுமார் பல லட்சம் மீட்டர் தண்ணீர் வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது. மேலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலை நடுவில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் சிரமத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் இடுவம்பாளையம் மற்றும் முருகம்பாளையம் சுண்ட மேடு ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பழுதடைந்து குடிநீர் வீணாகி வருவதாகவும், மேலும் முருகம்பாளையம் செல்லும் சாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்கள் ஆகியும், குடிநீர் குழாய் சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். கோடை காலம் என்பதால் தற்போது குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற குடிநீர் குழாய் குடைப்பை சரி செய்து முறையாக குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.