குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்


குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்
x

குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

கலவை அங்காளம்மன் கோவில் அருகே சிறு மின் விைச தொட்டியில் இருந்து ஒரு மாதமாக தண்ணீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் கோவிலுக்கு வெளி மாநிலத்தில் இருந்தும், வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் பயன்பாட்டுக்கும், தாகத்துக்கு குடிக்கவும் தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்தால் நன்றாக இருக்கும். எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறு மின்விசை தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story