பாளையங்கோட்டையில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிப்பு


பாளையங்கோட்டையில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிப்பு
x

பாளையங்கோட்டையில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மணப்படைவீடு புதிய தலைமை நீரேற்று நிலையத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதிய வால்வுகள் பொருத்தும் பணி மற்றும் இதர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் மணப்படைவீடு நீரேற்று நிலையத்தை இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் பாளையங்கோட்டை மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 6 முதல் 9 மற்றும் வார்டு எண்கள் 32 முதல் 36 மற்றும் 39-வது வார்டு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய இயலாது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த தகவலை பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.


Next Story