10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
குடிநீர் வினியோகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் முன்பு 3 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டது.
அதன்பின்னர் 7 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து நகர்மன்ற சேர்மன் தங்கம் ரவி கண்ணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நகரசபை அதிகாரிகள் ஆகிேயார் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
நடவடிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தரவேண்டிய குடிநீரை சரியான முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன்பேரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
ஆனால் மீண்டும் தற்போது குடிநீர் 10 நாட்கள் முதல் 13 நாட்கள் வரை வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிப்பதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆதலால் நகராட்சி நிர்வாகம் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.