தரங்கம்பாடி பேரூராட்சி சமயன் தெருவில் குடிநீர் தொட்டி
தரங்கம்பாடி பேரூராட்சி சமயன் தெருவில் குடிநீர் தொட்டி நிவேதா முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
மயிலாடுதுறை
பொறையாறு:
தரங்கம்பாடி பேரூராட்சி சமயன்தெருவில் நீண்ட நாள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணாசங்கரி குமரவேல் தலைமை தாங்கினார். பூம்புகார் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், தி.மு.க. நகர செயலாளர் முத்துராஜா, பேரூராட்சி துணைத்தலைவர் பொன்ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் மனோகரி, ஜோன்ஸ் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story