குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்


குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 11 May 2023 12:30 AM IST (Updated: 11 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வீணாகும் குடிநீர்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே நாகூர்-நன்னிலம் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் மூலமாக நாகூர், நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகம் அருகில் மெயின் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து குடிநீர் அதிக அளவில் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கடந்த சில நாட்களாக குழாயில் இருந்து குடிநீர் வீணாகி வருவதால், நாகூர், நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே குடிநீர் வீணாவதை தடுக்க நாகூர் - நன்னிலம் மெயின் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story