குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x

நாகை அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

நாகப்பட்டினம்

நாகையில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் பூமிக்கு அடியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் குழாய் செல்கிறது. இந்த குழாய் மூலம் தெற்கு பொய்கை நல்லூர், வடக்கு பொய்கைநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தெற்கு பொய்கை நல்லூர் மாரியம்மன் கோவில் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாக சாலையில் தேங்கி நிற்கிறது. இவ்வாறு குடிநீர் வெளியேறி வீணாவதால் அந்த பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வருவதில்லை. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கவனித்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story