விபத்து வழக்கில் சரக்கு வாகன டிரைவர் கைது
தொப்பூர் அருகே விபத்து வழக்கில் சரக்கு வாகன டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி
நல்லம்பள்ளி:
தொப்பூர் பகுதியை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய 3 அரசு பள்ளி மாணவர்கள் கடந்த 28-ந் தேதி மோட்டார் சைக்கிளில் தொப்பூர் போலீஸ் குடியிருப்பு சாலை வழியாக சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு மாணவருக்கு கால் முறிவு ஏற்பட்டும், மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாணவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற சரக்கு வாகனத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சரக்கு வாகன டிைரவர் சேலம் மாவட்டம் அமரகுந்தி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 64) என்பவரை தொப்பூர் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story