போக்சோவில் டிரைவர் கைது


போக்சோவில் டிரைவர் கைது
x

15 வயது சிறுமியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே உள்ள ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 28). டிரைவரான இவர், 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து சிறுமியின் தாயார், செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுமியையும், ராஜபாண்டியையும் போலீசார் கண்டுபிடித்தனர். சிறுமி மீட்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்தார்.


Next Story