மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை
கடலூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் அருகே அரிசிபெரியாங்குப்பம் எஸ்.என்.கே.நகரை சேர்ந்தவர் தேவநாதன் மகன் கலையரசன் (வயது 23). டிரைவர். இவருடைய மனைவி ராஜஸ்ரீ (21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆனநிலையில், தற்போது 10 மாத பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று கலையரசன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ராஜஸ்ரீ அவரிடம் தட்டிக்கேட்டு தகராறு செய்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டார். இதை பார்த்த மனைவி மற்றும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச் சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு கலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ராஜஸ்ரீ கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.