விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
மதுரை
வாடிப்பட்டி
மதுரை ஆண்டாள்புரம் வெங்கடாஜலபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விஸ்வேஸ்வர் (வயது 32). டிரைவர். இவருக்கும், பரவையை சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த விக்னேஸ்வரர் சமயநல்லூரில் ஒரு டீக்கடை முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story