விஷம் குடித்து டிரைவர் தற்கொலைகடன் தொல்லையால் விபரீத முடிவு


விஷம் குடித்து டிரைவர் தற்கொலைகடன் தொல்லையால் விபரீத முடிவு
x

கடன் தொல்லையால் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு

டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் ஜே.கே.கே. காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 37). இவர் கோபி வேட்டைக்காரன் கோவில் பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பல பேரிடம் கடன் வாங்கி சதீஷ்குமார் வீடு கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதன்காரணமாக அவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story