லாரியில் மாடுகளை ஏற்றி சென்ற டிரைவருக்கு அபராதம்
லாரியில் மாடுகளை ஏற்றி சென்ற டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி
ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று ஒரு லாரியில் 60 பசு மாடுகளை அனுமதியின்றி ஏற்றிக்கொண்டு அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஈது (வயது 26) என்பவர் ஓட்டி சென்றார். லாரி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் மோட்டார் வாகன ஆய்வாளர் அருண்குமார் லாரியில் அனுமதியின்றி மாடுகளை ஏற்றி வந்த டிரைவருக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தார்.
Related Tags :
Next Story